Posts

Image
அன்பு நண்பர்களே வணக்கம்!   இந்த மாத புத்தகத்தை உங்களிடம் ஒப்படைத்த கையோடு யாயாஹூ என்று சொல்லத் தோன்றுகிறது! அந்தளவுக்கு வேலை வாங்கி விட்டது! நேரடி இத்தாலிய மொழியென்பதால், கொஞ்சம் மெனெக்கெடல் கூடுதலாகி விட்டது! அதுவும் முதல்முறையாக போனெல்லி கதைகள் நமது வகம் காமிக்ஸில் வெளிவர இருப்பதால் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாக சகலத்தையும் பார்த்த பிறகே பிரிண்டிங்கிற்கு சென்றது! இதனால் சற்று தாமதமும் ஆகிவிட்டது!   இந்த இரண்டு கதைகளுமே ஒன்றுக்கு ஒன்றுக்கு சளைத்ததில்லை என்றே சொல்லத் தோன்றும் அளவிற்கு இருக்கிறது! ஒன்று க்ரைம் த்ரில்லர் என்றால், மற்றொன்று அறிவியல், ஆக்‌ஷன் த்ரில்லர் முதல் கதை நேர்கோட்டுக் கதையென்றால், இரண்டாவது கதை கொஞ்சம் complexities நிறைந்த கதை! கொஞ்சம் ரிலாக்ஸ் மைண்ட்டோடு படித்தால் இந்த 208 பக்க கதைகளை ரசிக்க நிறைய உள்ளது! கதையை படித்த கையோடு கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதையில் இருந்து சில சுவராஸ்யமான தகவல்களையும் படித்தால், அடடே இதை மிஸ் பண்ணிட்டோமான்னு இன்னொரு முறை படித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!  புத்தகங்கள் இன்று மாலை வந்த உடனே சந்தாதாரர்கள் ப...

நாயகன் சிஸ்கோ!

Image
அன்பு நண்பர்களே வணக்கம்! சிஸ்கோ என்றாலே தாமதமாகத்தான் வரும் என்று ஒரு எழுதப்படாத விதி போல மாறி விட்டது! சிஸ்கோ முதல் புத்தகம் 25 நாட்களுக்கு மேல் தாமதமாகத்தான் புத்தகம் கைக்கு வந்து சேர்ந்தது! அதைப் போல இரண்டாவது சிஸ்கோ புத்தகமும் தாமதமாயிட கூடாது என்பதற்காக, டிசம்பர் மாதமே வேலையை முடித்து பிரிண்டிங்கு அனுப்பி விட்டு, மோட்டு ஓலையை பார்ப்பது போல் தினமும் பார்த்து கொண்டிருந்தால், அதுவும் அதோ, இதோ என்று நாட்கள் ஓடியதே தவிர புத்தகம் வந்து சேர்ந்தபாடில்லை! ஒருவழியாக 13 ந்தேதி மாலைதான் பிரிண்டிங் ஆபீஸிலிருந்து போன் வந்தது! உங்கள் புத்தகம் ரெடி! பணம் அனுப்பியதும் புத்தகத்தை போட்டு விடுவோம் என்று சொல்ல, நானும் அவரிடம் இன்றே போட்டு விடுங்கள். 15 ந்தேதி பொங்கல் அன்று சென்னையில் நண்பர்கள் மத்தியில் புத்தகத்தை வெளியீடுவதாக திட்டமிட்டுள்ளேன் அதனால், இன்று எப்படியாவது அனுப்பி விடுங்கள் என்று அழுத்தமாக சொன்னதும், சொன்னது போலவே அவர்களும் அனுப்பி வைத்து விட்டார்கள்! அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், பார்சல் போட்டு அனுப்பிய ரசீதுடன், பொங்கல் விடுமுறை என்பதால் புதன்கிழமைதான் டெலிவரி தருவ...

நலமாய் விடியட்டும் 2023!

Image
  வணக்கம் நண்பர்களே! வகம் காமிக்ஸை இப்போதுதான் தொடங்கியது போல் உள்ளது. அதற்குள் ஆறுமாதம் ஓடிவிட்டது. இந்த ஆறு மாதத்திற்குள் ஆறு புத்தகங்கள் வெளியிட்டது மிகப்பெரிய சாதனையாக தெரிகிறது. அதிலும் ஒரு வண்ணப் புத்தகம், பாக்கெட் சைஸ், தீபாவளி மலர் என பல கதைகளை முயற்சித்தோடு இல்லாமல், குறுகிய காலகட்டத்திலேயே ஒரு வருட அட்டவணை, சந்தா எனவும் அறிமுகப்படுத்தி விட்டாச்சு! ஆனால், இரண்டு வருடத்திற்கு முன்பு, அதாவது புத்தகம் வெளியிட முடிவெடுத்த பிறகு, அயல்நாட்டு கதைகளெல்லாம் ராயல்டி கொடுத்து நம்மால தாக்குப் பிடிக்க முடியாது என்கிற காரணத்தினால், உள்ளூர் நிறுவனக் கதைகளின் லைசன்ஸ் வாங்கியே வெளியிடலாம்னு, முடிவெடுத்து பல உள்ளூர் கதைகளுக்காக அந்தந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசியதில், எதுவும் செட் ஆகாமல் ஏமாற்றம்தான் மிஞ்சியது.  ஒரு கட்டத்தில் ஏதாவது புத்தகத்தை போட்டே தீர வேண்டும் என்கிற சலிப்பினால்,  பப்ளிக் டொமைன் ( இந்த புத்தகங்களுக்கு யாரிடமும் லைசன்ஸ் பெற வேண்டியதில்லை! இது பொது உடமையாக்கப்பட்ட புத்தகங்கள்) என்னும் வெப்சைட்டிற்கு சென்றால், ஏராளமான ஆங்கில கதைகள் இருந்தன. அதில், நமக்...
Image
நண்பர்களே வணக்கம் வகம் காமிக்ஸ் தொடங்குவதற்கு முன்பு, எந்த காமிக்ஸை போடுவதென்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, சட்டென நினைவுக்கு வந்தது உள்ளூர் காமிக்ஸ் மட்டும்தான், ஏனெனில், அயல்நாட்டு கதைகள் எல்லாம் ராயல்டி (லைசன்ஸ்) அதிகமென்பதால், உள்ளூர் காமிக்ஸ்களையே போடுவதென்று முடிவெடுத்து முதலில் அணுகியது அமர் சித்திரக்கதை நிறுவனத்தை! அவர்கள் போட்ட கண்டிஷன் ஒத்து வராததால், அடுத்து பைகோ நிறுவனத்தை கேட்டு பார்த்தேன். அவர்களே தமிழில் போடுவதாக சொல்லியதால், அதையும் மறந்து விட்டு, அடுத்து நண்பர் ஒருவர் சொன்னதால் யாளி ட்ரீம்ஸ் கதைகளை கேட்டு இருந்தோம். ஒப்பந்தம் முடிவாகும் தருணத்தில், திடீரென வெறொரு கம்பெனிக்கு கைமாறி விட்டது! அடடா இதுவும் போச்சான்னு விரக்தியில் இருக்கும் போது தான் நம்ம கார்மோடி கிடைத்தார். உடனே அவரை பேசி முடித்து விட்டு மளமளவென வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, சிஸ்கோவும், பிரிட்டிஷ் கதைகளும் கிடைத்தன. ஆஹா ஒவ்வொரு கதைகளாக ஒவ்வொரு மாதம் போட்டு வந்தாலும் ஒரு இரண்டு வருடத்திற்கு வண்டி ஓட கதைகள் உள்ளன என்று பெருமிதம் கொண்டிருந்தேன். அதன் பிறகு நிறைய கதைகள் கிடைத்து கொண்டிருக்க, இரண்டு, ...
Image
          அன்புடையீர் வணக்கம்! திடீர் ஸ்பெஷல் போல தீபாவளி கதம்ப மலரை அறிவித்து விட்டு, அதை கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஒரு கட்டத்தில் இதனால் ஹை பிரஷரே வரும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்! நிறைய கதைகள் ஒரே இதழில் கொண்டு வரும் அனுபவம் இல்லாததினால் ஏற்பட்ட சிக்கல். எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்து தீபாவளி கதம்ப மலரை கொண்டு வந்தாச்சு! இந்த புத்தகத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, நிறைய நெருங்கிய நண்பர்கள் பார்த்து பண்ணுங்கள் எல்லாமே பிரிட்டிஷ் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது! அதுவுமில்லாமல் இது ஒரு மெகா பட்ஜெட் பணத்தை போட்டு, கையை சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்று நிறைய அறிவுரைகளும், ஆலோசனைகளும் வந்து கொண்டேயிருந்தது! அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டே தீபாவளி மலரை கொண்டு வரும் முனைப்பிலே தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்! காரணம், என்னதான் பிரிட்டிஷ் கதைகளாக இருந்தாலும், வெளிவரப்போகும் கதைகளின் மீது ஆழ்ந்த, அதீத நம்பிக்கையின் காரணமாகவே இதில் முனைப்பாக இருந்தேன்!   அதேசமயம் இது நிச்சயம் பலரை கவரும் எ...

சிஸ்கோ கிட் ஸ்பெஷல்

Image
அன்புடையீர் வணக்கம் வகம் காமிக்ஸ்   வெளியிட   முடிவு   செய்ததுமே முதலில் முடிவானவர் கேனான் பால் கார் மோடி தான்! அதன்,  பிறகு  இரண்டாவதாக  முடிவானவர் வன்மேற் கின் நமது அபிமான நாயகரான சிஸ்கோகிட் தான்! கார்மோடி   புத்தகம் வெளிவந்த பிறகு,   கதை, மொழிபெயர்ப்பு, மேக்கிங் என எல்லாவற்றிலுமே   சிறப்பான பெயர்   பெற்றிருந்தாலும், விற்பனையில் சற்று மந்த நிலையாகவே   சென்றதால்,   சற்று   ஏமாற்றத்துடனே   சிஸ்கோவின் பணியை தொடங்கப்பட்டது! முதலில், ஏற்கனவே வெளிவந்த கதை ஒன்று , இதுவரை வெளியிடப்படாத இரண்டு கதைகள் என தேர்வு செய்து, அதனை   மூன்று நண்பர்களுக்கு மொழிபெயர்க்க அனுப்பப்பட்டது! மொழிபெயர்ப்புக்கு அனுப்பிவிட்டு இந்த கதைக்கான முன் அட்டைப்படத்திற்கு எதை   போடுவது   என்று   யோசித்துக்   கொண்டிருக்கும் போது, ஏதேதோ   சிஸ்கோ அட்டைகளை ஆன்லைனில் தேடிப் பார்த்தும் எதுவும் தோதாக சிக்கவில்லை!   சிஸ்கோவிற்காக காப்பி ரைட்ஸ் வாங்கியவரும் கதைத்   தொடருக்கா...