Posts

Image
அன்பு நண்பர்களே வணக்கம்! சிறிய இடைவெளியில் வந்து இதன் மூலமாக உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சியை தருகிறது! சிலபல காரணங்களால் செப்டம்பர் மாத இதழை கொண்டு வர முடியவில்லை! அதை ஈடுகட்டும் விதமாக இம்மாதம் இரண்டு இதழைக் கொண்டு வந்தாயிற்று! இரண்டு இதழை ஒரே நேரத்தில் கொண்டு வருவதும் பல விஷயங்களுக்கு சாதகமாகவும் உள்ளது. ஒரே கூரியரில் அனுப்புவதால், பேக்கிங் வேலையும் எளிதாக உள்ளது! செலவீனங்களும் கம்மியாகிறது! அதே போல, புத்தகம் வாங்குபவர்களுக்கும் ஒரே கூரியர் கட்டணத்திலும் முடிந்து விடுகிறது! இதனால்தான் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இம்மாதம் வெளிவந்துள்ள மிருக மனிதர்கள் & மோசடி நகரம் இரண்டுமே புதிய கதைகள், புதிய களங்கள். சைஸ் மற்றும் விலை எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் வந்துள்ளது. சிஸ்கோ இந்த மாறுபட்ட சைஸ் அனைவருக்கும் பிடிக்குமென்றே நினைக்கிறேன்! இதைப்பற்றிய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதே போல் மிருக மனிதர்கள் கதைக்கும் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது! புத்தகம் எப்போ வருமென்று நிறைய நண்பர்கள் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தினந்தோற

ஈரோட்டில் டயபாலிக்!

Image
சென்ற வருடம் ஜூலையில் துவங்கிய நமது காமிக்ஸ் பயணம், ஒரு வருடம் கடந்து சென்று கொண்டிருப்பது மிகப் பெரிய விஷயம் என்றுதான் சொல்லுவேன்! புத்தக வாசிப்பாளர்கள் குறைந்திருக்கும் நிலையில், அதுவும் சித்திரக்கதை வாசிப்பாளர்கள் என்பது மிகச்சிறிய வட்டம் கொண்டது! அப்படி இருந்தும் எப்படியோ தட்டுத்தடுமாறி புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே! அதுவும் ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில் ஈரோடு புத்தக கண்காட்சியில் நமக்கொரு தனிஸ்டால் கிடைத்தது, மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் கருதுகிறேன். புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பதால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டாலும், என்ன ஆனாலும் பரவாயில்லை, எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள இதுவொரு வாய்ப்பாகவே கருதினேன். அங்கு இருந்த பனிரெண்டு நாட்களும் ஏதோ ஒரு புதிய உலகத்தில் வசித்தது போல் இருந்தது! (அதையெல்லாம் சொல்லணும்னா ஒரு புத்தகமே எழுதலாம் போல) நம் புத்தகங்கள் வாங்குவதற்கும், நம்மை சந்திப்பதற்கும் கேரளா, கோயமுத்தூர், பெங்களூர், மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர், ஓசூர், இன்னும் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். புத்தக

வதனம் பிம்பம் சிஸ்கோ

Image
அன்பு நண்பர்களே வணக்கம்! இந்த மாதம் வெளிவந்துள்ள சிஸ்கோ கிட் ஸ்பெஷல் – 3 வது புத்தகம் வெளிவந்து பலரை கவர்ந்து வருவது மகிழ்ச்சியே. முதல் கதையான கால்நடை திருடர்கள் கதையில் வரும் அழகியான டாமி டூ கன்,னும் இரண்டாவது கதையான பழிக்குப் பழி கதையில் வரும் ட்ரிக்கரும் பலரின் மனம் கவர்ந்தவர்களாக மாறியுள்ளனர். வீரன், சூரனாக வாழ்ந்து வந்த ட்ரிக்கர் தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியத்தினால் துப்பாக்கியை தூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படியெல்லாம் சந்திக்கிறார் என்பதை அழகாக சொல்லியக்கதை இந்தக்கதையை (பழிக்குப் பழி) நானும் ரொம்ப ரசித்து படித்த கதை. மூன்று கதைகளுமே பலரை கவர்ந்திருந்தாலும் கூட ஒரு சிலருக்கு முதல் இரண்டு சிஸ்கோ புத்தகத்தின்  அட்டைப்படம் போல இதிலும் அமையாதது வருத்தமே! சிஸ்கோ புத்தகத்திற்கு அட்டைப்படம் தான் பெரும் பிரச்சனையே! சிஸ்கோ கதைகள் எல்லாமே ஸ்ட்ரீப்பாக வந்தது என்பதால் அதற்கு தனி அட்டைப்படங்கள் கிடையாது! அதே போல நல்ல குவாலிட்டியான தனி இமேஜும் இண்டெர்நெட்டிலும் கிடையாது எப்படியோ தேடிப்பிடித்து தனி இமேஜ் அதுவும் கருப்பு வெள்ளையில்  நல்ல குவாலிட்டி இ