அன்பு நண்பர்களே வணக்கம்!
இந்த மாத புத்தகத்தை உங்களிடம் ஒப்படைத்த கையோடு யாயாஹூ என்று சொல்லத் தோன்றுகிறது! அந்தளவுக்கு வேலை வாங்கி விட்டது! நேரடி இத்தாலிய மொழியென்பதால், கொஞ்சம் மெனெக்கெடல் கூடுதலாகி விட்டது! அதுவும் முதல்முறையாக போனெல்லி கதைகள் நமது வகம் காமிக்ஸில் வெளிவர இருப்பதால் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாக சகலத்தையும் பார்த்த பிறகே பிரிண்டிங்கிற்கு சென்றது! இதனால் சற்று தாமதமும் ஆகிவிட்டது! இந்த இரண்டு கதைகளுமே ஒன்றுக்கு ஒன்றுக்கு சளைத்ததில்லை என்றே சொல்லத் தோன்றும் அளவிற்கு இருக்கிறது! ஒன்று க்ரைம் த்ரில்லர் என்றால், மற்றொன்று அறிவியல், ஆக்ஷன் த்ரில்லர் முதல் கதை நேர்கோட்டுக் கதையென்றால், இரண்டாவது கதை கொஞ்சம் complexities நிறைந்த கதை! கொஞ்சம் ரிலாக்ஸ் மைண்ட்டோடு படித்தால் இந்த 208 பக்க கதைகளை ரசிக்க நிறைய உள்ளது! கதையை படித்த கையோடு கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதையில் இருந்து சில சுவராஸ்யமான தகவல்களையும் படித்தால், அடடே இதை மிஸ் பண்ணிட்டோமான்னு இன்னொரு முறை படித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!
புத்தகங்கள் இன்று மாலை வந்த உடனே சந்தாதாரர்கள் பாதி பேருக்கு புத்தகத்தை அனுப்பி வைச்சாச்சு! திங்களன்று இதோட ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன்! புதிய தடம், புதிய சைஸ் என மாற்றத்துடன் இந்த மாத புத்தகம் வெளிவந்துள்ளது! நிறைய விஷயங்கள் நிறைய மாற்றங்கள், நிறைய புதிய நாயகர்கள் என நமது முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதன் பலனாக நம் பால்யத்தில் நம்மையெல்லாம் கிறங்கடிக்கச் செய்த இரும்பு மனிதர் டிடெக்டிவ் ஜெட் விரைவில் நமது வகமில் உலாவரப் போகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் நிறைய உற்சாக துள்ளலை அங்கங்கே காண முடிந்தது! சீக்கிரமாகவே இவரை வெளியிட ஆவன செய்கிறேன்! இவரோடு நில்லாமல் இன்னொரு புதிய நாயகரும் மார்ச் மாத சிஸ்கோ இதழில் அறிவிப்பு வரும்! அவர் யார் என பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
அடுத்த மாதம் சிஸ்கோவின் வழக்கமான மூன்று கதைகளை தாங்கி வெளிவருகிறது! இரத்த வெறியர்கள், மரணப் பள்ளத்தாக்கு, பழிக்குப் பழி, இந்த வருட சிஸ்கோ கதைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் என்பதும் எனக்கும் புரிகிறது! அடுத்த வருடம் முதல் வருடத்திற்கு மூன்று புத்தகங்கள் மட்டுமே வெளிவரும் படி பார்த்துக் கொள்கிறேன்! இறுதியாக 2024 ல் இன்னொரு அதிரடி நாயகரும் நமது வகம் காமிக்ஸில் இணையப் போகிறார் என்கிற கொசுறுத் தகவலையும் சொல்லிவிட்டு விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்!
Deductive ZETஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் - நன்றி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சார் கூடிய விரைவில் வெளியிட்டு விடலாம்
DeleteI am waiting Kaleel ji..😘😍
ReplyDeleteஇன்னும் இன்னும் நிறைய அதிரடி அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்..😃😍💪👍👌
மகிழ்ச்சி ஜி கூடுமானவரை அதிரடியான கதைகளை இறக்கவே முயற்சிகள் போய்ட்டிருக்கு
DeleteJi..2023 அட்டவணையில இருந்த பல சிஸ்கோ கதைகளை கழட்டிவிட்டுட்டீங்க போல..😶
ReplyDeleteஒரேயடியா சிஸ்கோ வை கழட்டி விட்டுறாதீங்க..🙏
#சிஸ்கோ பேன்ஸ்#
நியூயார்க்கின் நிக் ரைடர் வருகிறார் பராக்! பராக்! பராக்!
ReplyDeleteஇரும்பு மனிதர் ஜெட் வருகிறார்! பராக்! பராக்! பராக்!
அடுத்ததாக இன்னொருவரும் வருகிறார்! பராக்! பராக்! பராக்!
உங்களுடைய அறிவிப்புகள் உற்சாகத்தை கொடுக்கின்றன ஐயா!
ஹா ஹா மிக்க நன்றி ஐயா!
Deleteபுதிய நாயகரை வரவேற்கின்றேன். இந்த இதழை ஆவலோடு வரவேற்க காத்திருக்கின்றேன். வகம் வளமாய் வரட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Deleteமாதா மாதம் புத்தக ஆக்கம் மெழுகேறிகொண்டே வருகிறது..ஜெஸ்லாங் ஏதேனும் தகவல் உண்டா.. வராத கதைகள் இன்னும் நிறைய ஜெஸ்லாங்கில் உள்ளது..
ReplyDeleteவிலைதான் பிரச்சனையே நண்பரே! 1000 காப்பிகளுக்கான ராயல்டி தான் தருகின்றனர். அதை சிங்கள் புத்தகத்திற்கு 300 க்கு மேல் வைத்தால் தான் கட்டுப்படியாகுமே ஆனால், 50 பக்கத்திற்கு 300 என்றால் அனைவரும் வாங்குவது கஷ்டம் என்பதால் வண்ணப்பக்கமே இந்த வருடம் செல்லாததும் ஒரு காரணம்
Deleteநிக் ரைடர் வேற லெவல் கலீல் !
ReplyDeleteYellow shade தாள், clean printing - அதகளக் கதைகள் என்று கலக்கி விட்டீர்கள் ! ஆகச்சிறந்த வெளியீடு இதுவரை இதுவே !
மிக்க நன்றி ஜி உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பது சந்தோஷமாக உள்ளது!
Deleteஅட்டை படம் அருமை.
ReplyDeleteஇரண்டு கதைகளுமே நன்றாக இருக்கிறது.
நன்றி சார்!
Delete