Posts

Showing posts from February, 2023
Image
அன்பு நண்பர்களே வணக்கம்!   இந்த மாத புத்தகத்தை உங்களிடம் ஒப்படைத்த கையோடு யாயாஹூ என்று சொல்லத் தோன்றுகிறது! அந்தளவுக்கு வேலை வாங்கி விட்டது! நேரடி இத்தாலிய மொழியென்பதால், கொஞ்சம் மெனெக்கெடல் கூடுதலாகி விட்டது! அதுவும் முதல்முறையாக போனெல்லி கதைகள் நமது வகம் காமிக்ஸில் வெளிவர இருப்பதால் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாக சகலத்தையும் பார்த்த பிறகே பிரிண்டிங்கிற்கு சென்றது! இதனால் சற்று தாமதமும் ஆகிவிட்டது!   இந்த இரண்டு கதைகளுமே ஒன்றுக்கு ஒன்றுக்கு சளைத்ததில்லை என்றே சொல்லத் தோன்றும் அளவிற்கு இருக்கிறது! ஒன்று க்ரைம் த்ரில்லர் என்றால், மற்றொன்று அறிவியல், ஆக்‌ஷன் த்ரில்லர் முதல் கதை நேர்கோட்டுக் கதையென்றால், இரண்டாவது கதை கொஞ்சம் complexities நிறைந்த கதை! கொஞ்சம் ரிலாக்ஸ் மைண்ட்டோடு படித்தால் இந்த 208 பக்க கதைகளை ரசிக்க நிறைய உள்ளது! கதையை படித்த கையோடு கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதையில் இருந்து சில சுவராஸ்யமான தகவல்களையும் படித்தால், அடடே இதை மிஸ் பண்ணிட்டோமான்னு இன்னொரு முறை படித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!  புத்தகங்கள் இன்று மாலை வந்த உடனே சந்தாதாரர்கள் பாதி பேருக்கு ப