நலமாய் விடியட்டும் 2023!
வணக்கம் நண்பர்களே!
வகம் காமிக்ஸை இப்போதுதான் தொடங்கியது போல் உள்ளது. அதற்குள் ஆறுமாதம் ஓடிவிட்டது. இந்த ஆறு மாதத்திற்குள் ஆறு புத்தகங்கள் வெளியிட்டது மிகப்பெரிய சாதனையாக தெரிகிறது. அதிலும் ஒரு வண்ணப் புத்தகம், பாக்கெட் சைஸ், தீபாவளி மலர் என பல கதைகளை முயற்சித்தோடு இல்லாமல், குறுகிய காலகட்டத்திலேயே ஒரு வருட அட்டவணை, சந்தா எனவும் அறிமுகப்படுத்தி விட்டாச்சு! ஆனால், இரண்டு வருடத்திற்கு முன்பு, அதாவது புத்தகம் வெளியிட முடிவெடுத்த பிறகு, அயல்நாட்டு கதைகளெல்லாம் ராயல்டி கொடுத்து நம்மால தாக்குப் பிடிக்க முடியாது என்கிற காரணத்தினால், உள்ளூர் நிறுவனக் கதைகளின் லைசன்ஸ் வாங்கியே வெளியிடலாம்னு, முடிவெடுத்து பல உள்ளூர் கதைகளுக்காக அந்தந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசியதில், எதுவும் செட் ஆகாமல் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஒரு கட்டத்தில் ஏதாவது புத்தகத்தை போட்டே தீர வேண்டும் என்கிற சலிப்பினால், பப்ளிக் டொமைன் ( இந்த புத்தகங்களுக்கு யாரிடமும் லைசன்ஸ் பெற வேண்டியதில்லை! இது பொது உடமையாக்கப்பட்ட புத்தகங்கள்) என்னும் வெப்சைட்டிற்கு சென்றால், ஏராளமான ஆங்கில கதைகள் இருந்தன. அதில், நமக்கு தேவையான கதைகளின் டாக்குமெண்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்! அப்படி தேடியதில், ஹவுஸ் ஆப் மிஸ்ட்ரீ என்னும் கதையும், சில ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளும் இருந்தன. ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் பப்ளிக் டொமைனில் இருதாலும் கூட, அது பின்னாளில் யாரிடமிருந்தாவது காப்பிரைட்ஸ் பிரச்சனைகள் வரலாம் என்று கருதி, அதை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டு விட்டு, ஹவுஸ் ஆப் மிஸ்ட்ரீ கதையை வெளியிட்டு பார்க்கலாம் என்று கருதி, அதை டவுன்லோட் செய்து, மொழிபெயர்க்கவும் திட்டமிட்டேன். இதற்கிடையே, நண்பர்கள் காப்பிரைட்ஸ் இல்லாத கதைகளை எல்லாம் போடாதீர்கள், காப்பிரைட்ஸ் வாங்கிய கதைகள் மட்டும் வெளியிட முயற்சி செய்யுங்கள் என அறிவுருத்தவே. சரி என நானும் ஒப்புக் கொண்டு, பப்ளிக் டொமைனில் உள்ள கதைகளை வெளியிடும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, வேறு ஏதாவது கதைகளை முயற்சி செய்யலாம் என்கிற எண்ணத்தோடு,
நண்பரின் உதவியோடு கார்மோடி புத்தகத்திற்கு மெயில் அனுப்பி பார்த்தோம். மெயில் அனுப்பிய சில நாட்களிலேயே ரிப்ளையும் வந்தது. ஒருவித சந்தோஷ துள்ளலுடன் சுடச்சுட பணத்தை கட்டிவிட்டு பைலை தருவிச்சு வேலையை தொடங்கினோம். அதன் பிறகு, பிரிட்டிஷ் கதைகளில் ஒரு கதையை வாசகர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர். அந்த கதை & படங்கள் எனக்கு பிடித்து போக, அந்த கதையோட ரைட்ஸ் யாரிடம் உள்ளது என விசாரித்து அதோட ரைட்ஸ்,ஐயும் வாங்க முயற்சித்த போது. அவர்களிடம் இன்னும் சில கதைகள் இருந்ததை கேள்விப்பட்டு, அந்த கதைகளையும் சேர்த்து வாங்கினோம். அப்பாடா ஒரு ரெண்டு வருஷத்திற்கு இந்த கதைகளை வைத்து ஓட்டி விடலாம் என்ற நிம்மதி பெருமூச்சுடன் இருந்தோம். இதற்கிடையே தமிழில் சில வருடங்களுக்கு முன்பு சிஸ்கோ கிட் என்ற நாயகரின் கதைகள் வெளிவந்திருந்தது. அதன் பிறகு பல வருடமாகவே அவரை யாரும் சீண்டவே இல்லை. சரி அவரையும் கேட்டு பார்ப்போம் என மெயில் தட்டியதில். அவரும் available a இருப்பதை தெரிந்து கொண்டு, அவருடைய கதைகளையும் வாங்கினோம்! பை நிறைய புத்தகங்கள் நிறைந்ததை போன்ற ஒரு திருப்தி ஏற்பட்டது. சிஸ்கோ கிடைத்தவுடனே அவரை ஒரு வித்தியாசமாக கொண்டு வரணும் என்கிற உத்வேகமும் எழுந்தது. நினைத்தது போலவே சிஸ்கோவை வித்தியாசமான ஒரு பேசும் பொருளாக கொண்டு வந்ததில் இன்றும் அளவிட முடியாத சந்தோஷம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதோ ஜனவரியில் அதுவும் புதிய வருடத்தில் மீண்டும் சிஸ்கோ வருவது, அதுவும் இரண்டுவிதமான சற்று மாறுபட்ட அட்டையில் வெளிவருவது இன்னும் சந்தோஷ மீட்டரை அதிகப்படுத்துகிறது. இதுவும் முதல் கதையைப் போல பேசப்படும் என்கிற நம்பிக்கையில் இக்கதைகளை உங்களிடம் ஒப்படைக்க விருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்தினால், இன்னும் சந்தோஷ மீட்டர் எகுறச் செய்யும்! நன்றி நண்பர்களே புதிய வருடம் எல்லோருக்கும் நலமாய் விடியும் என்கிற நம்பிக்கையில் கடந்து செல்வோம்!
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துகள்!
உங்களின் காமிக்ஸ் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவணக்கம் ஜி
ReplyDeleteவணக்கம் நண்பரே!
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👍👍
ReplyDeleteநன்றி சார்!
Deleteஇரு அட்டையிலும் வித்தியாசம் உள்ளதா? கண்டே பிடிக்க முடியவில்லை...
ReplyDeleteமலை....
Deleteஹா ஹா நிச்சயம் நீங்கள் டாக்டரை பார்ப்பது நல்லது 😅
Deleteவெளிவந்த புத்தகங்களில்
ReplyDeleteதீபாவளி மலர் டாப்😃😃😃😃
ஜனவரி முதல் வாரத்தில் சந்தா அனுப்பி வைக்கிறேன்
சிஸ்கோ கதைகள் கௌபாய் கதைகளில் நேர்கோட்டு கதையாக இருக்கும், டெக்ஸ் போல பல எதிரிகளுடன் ஒரே கதையில் மோதாமல் ஒரு எதிரியுடன் மட்டும் மோதி முடிப்பார். படிப்பதற்கு எதுவான கதைகள் சிஸ்கோ கதைகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Deleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சார்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கலீல் ஜி..😍😘🙏💐
ReplyDeleteசிகரம் தொட சீக்கிரம் தொட வாழ்த்துக்கள்.❤💛.
நன்றி ஜி
Deleteவணக்கம். தங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசிஸ்கோ அட்டை அழகாக இருக்கின்றது.
மிக்க நன்றி சகோ
Deleteசிஸ்கோ கிட் 2ம் வெற்றி பெறும் .படிக்க ஆவலாக உள்ளேன். சிஸ்கோ கிட் பாஞ்ஜோ ஜோடி கலக்கலான ஜோடி. இதழ் எப்போது வரும் என்ற ஆவல் மோலோங்கி வருகிறது.
ReplyDelete