நண்பர்களே வணக்கம்

வகம் காமிக்ஸ் தொடங்குவதற்கு முன்பு, எந்த காமிக்ஸை போடுவதென்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, சட்டென நினைவுக்கு வந்தது உள்ளூர் காமிக்ஸ் மட்டும்தான், ஏனெனில், அயல்நாட்டு கதைகள் எல்லாம் ராயல்டி (லைசன்ஸ்) அதிகமென்பதால், உள்ளூர் காமிக்ஸ்களையே போடுவதென்று முடிவெடுத்து முதலில் அணுகியது அமர் சித்திரக்கதை நிறுவனத்தை! அவர்கள் போட்ட கண்டிஷன் ஒத்து வராததால், அடுத்து பைகோ நிறுவனத்தை கேட்டு பார்த்தேன். அவர்களே தமிழில் போடுவதாக சொல்லியதால், அதையும் மறந்து விட்டு, அடுத்து நண்பர் ஒருவர் சொன்னதால் யாளி ட்ரீம்ஸ் கதைகளை கேட்டு இருந்தோம். ஒப்பந்தம் முடிவாகும் தருணத்தில், திடீரென வெறொரு கம்பெனிக்கு கைமாறி விட்டது! அடடா இதுவும் போச்சான்னு விரக்தியில் இருக்கும் போது தான் நம்ம கார்மோடி கிடைத்தார். உடனே அவரை பேசி முடித்து விட்டு மளமளவென வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, சிஸ்கோவும், பிரிட்டிஷ் கதைகளும் கிடைத்தன. ஆஹா ஒவ்வொரு கதைகளாக ஒவ்வொரு மாதம் போட்டு வந்தாலும் ஒரு இரண்டு வருடத்திற்கு வண்டி ஓட கதைகள் உள்ளன என்று பெருமிதம் கொண்டிருந்தேன். அதன் பிறகு நிறைய கதைகள் கிடைத்து கொண்டிருக்க, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து கதைகள் என போட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இப்போது நான்கு, ஐந்து மாத கடுமையான முயற்சிக்குப் பின்னர், பொனெலியின் கதைகளும் கிடைத்து விட்டது. நான் முதலிலேயே சொன்னது போல் இந்தத் துறையில் நீடிக்க வேண்டுமென்றால் பணம் என்கிற விட்டமின்கள் நிறைய இருந்தால்தான் இதில் தொடர்ந்து நீடிக்க முடியுமென்று. சரி நாமளும் முடிந்தவரை பயணிப்போம் என்று விட்டு விட்டேன். அதன் பிறகு நிறைய நண்பர்கள் சந்தா போட்டு பாருங்கள்! உங்கள் தடையில்லா பயணத்திற்கு வழித்துணையாக இருக்கும் என சொல்ல, நானும் பல நாட்கள் சித்தித்து சரி அடுத்த வருடம் சந்தாவை போட்டுத்தான் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து, இதோ 2023 அட்டவணையும் இங்கே கொடுத்துள்ளேன்! வருட பட்ஜெட் போடுவது போல என்னால் முடிந்த கதைகளை (விலைகளை) தேர்ந்தெடுத்து போட்டுள்ளேன்! இந்த சந்தா திட்டத்தில் பலர் இணைந்தால், இன்னும் நிறைய காமிக்ஸ் கனவுகளை நனவாக்கலாம். இந்த கதைகள் மட்டும் இல்லாமல் இன்னும் சில நிறுவனத்தோடு சில கதைகளையும் பேசி வருகிறேன்! அந்த கதைகள் கிடைத்தால், ஏதேனும் சந்தர்ப்பத்தில் அதையும் வெளியிட முயற்சிக்கலாம், 2023 வருட சந்தா கதைகள் பற்றிய கருத்தையும் அனைவரும் தெரிவித்தால், நல்லாயிருக்கும்! எப்படியோ 2023 ம் வருடம் ஓடிவிடும் அடுத்து 2024 அதற்கான திட்டமிடல்கள் இதுவரை எதுவும் இல்லை! எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் கடந்து போவதை தவிர. நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்!         














 பின் குறிப்பு -

கையிருப்பில் உள்ள கதைகளை கொண்டு, இந்த 2023 அட்டவனையை உருவாக்கியுள்ளேன். அதுவும் புதிதாக நிறுவனம் தொடங்கி ஐந்து மாதங்கள் ஆவதற்குள், இந்த கதைகள் யானைப் பசிக்கு சோளப்பொறி போலத்தான் இருக்கும் என்பது ஐயமில்லை! எதுவாக இருந்தாலும் கருத்திடுங்கள் - நன்றி 

Comments

  1. Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
    2. Mind blowing.... ஆரம்பமே அதிரி புதிரியா இருக்கே கலீல் sir. 😍

      Delete
    3. மிக்க நன்றி சார் 😍

      Delete
  2. சந்தா இரண்டு தவணைகளில் செலுத்தும் வசதி உண்டுங்களா சார் ?

    ReplyDelete
  3. Khaleel Sir. Happy to see your 2023 Attavanai. Julia , Angela inclusion super. As expected John is in Regular santha. Deserved. Cisco - Appears to be over doze. If possible you can bring few more new comers in place of Cisco. But Cisco also we need. Rest is perfect. Also pls let us know snth payt can be made in instalments. Thnkx.

    ReplyDelete
    Replies
    1. காப்பி ரைட்ஸ் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மட்டுமே தருகிறார்கள் அதனால். வாங்கியதை முதலில் போட்டு முடித்தால் தான் அடுத்த கதைகளை வாங்க முடியும்! அதனால் தான் சிஸ்கோ கையிருப்பில் உள்ளதை அடுத்த வருடம் போட்டுவிட முடிவு செய்தாகி விட்டது! சந்தா இரண்டு தவனையாக கூட கட்டலாம்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. @Kaleel ji..😍😃😀😘

    அருமையான அறிவிப்பு..😍
    அட்டகாசமான அறிவிப்பு..😘👍👏
    பட்டைய கிளப்புங்க ஜி..😍😃💪✊👍👏💐🌷🌹

    ReplyDelete
  6. 2023 சந்தா நல்ல ஒரு தொடக்கம்.
    டிடெக்டிவ் ராபின் வகமிலும் இடம் பிடிப்பது மிகவும் மகிழ்ச்சி. டிடெக்டில் கதைகள அரிதாகி வரும் காலங்களில் ஒன்றுக்கு இரண்டு ஜீவியாவும் இருப்பது சிறப்பு.

    இரு தவணைகளாக பணம் செலுத்தலாம் தானே ?!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பல துப்பரிவாளர்களை களம் கொண்டு வர ஆசை தான் நண்பரே! ஆனால். எதையும் அகலக்கால் வைக்காமல் சிறிது சிறிதாக முயற்சிப்போம் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன்! அதுவுமில்லாமல் எல்லாமே வாங்க வேண்டுமென்றால் அதிக பணமும் தேவை! சந்தா இரண்டு தவணையாக கூட கட்டலாம்

      Delete
    2. எ .. என்னாது உங்களுக்கே 2 தவணையா ? :-) அப்போ நாங்க எல்லாரும் சீட்டு கட்டி படிச்சுட்டு ஆளுக்கு ஒரு புக்க வெச்சுக்கணும் போல இருக்கே ;-)

      Delete
  7. வாழ்த்துக்கள் ஜி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  8. Surprisingly refreshing. Hope it turns out to be successful.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  9. வருடத்திற்கு இரண்டு குண்டு
    இரண்டு குட்டி புக் போடுங்கள்
    சிஸ்கோ ஓவர் டோஸ் ஆகாமல் பாத்துக்குங்க
    கலர் புக் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் வரும் எல்லா புத்தகமும் சொல்ல போனால் குண்டு புத்தகம் போலத்தான் சார்! 2024 இல் சிஸ்கோ அளவாக வருவார் சார்

      Delete
    2. நன்றி நண்பரே

      Delete
  10. சந்தா பற்றிய முழு விபரம தெரிவியுங்கள் சகோ... பல பேர் ஆவலாய் உள்ளனர்...

    ReplyDelete
    Replies
    1. கடைசீ படத்தில் உள்ளது நண்பரே !
      1) தமிழ்நாட்டுக்குள் 3000 ரூ /-
      2) தமிழ்நாட்டுக்கு வெளியே 3600 ரூ /- (இந்தியாவில்)
      3) இரு தவணைகள் சாத்தியம் 

      Delete
  11. அருமையான அறிவிப்பு... கதைகளெல்லாம் வெற்றியடைய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. புத்தகம் சைஸ் என்ன? ஏதாவது புத்தகம் வண்ணத்தில் வருகிறதா அல்லது அனைத்தும் கருப்பு வெள்ளை தானா

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே கருப்பு வெள்ளையில் தான் சார்! இரண்டு விதமான சைஸ்களில் வரும்

      Delete
  13. good stories selection. my favourite cisco kid , robin, julia all in bang. i hope Martin Mystere will join Vagam in 2024. Congrats

    ReplyDelete
    Replies
    1. Thanks brother கண்டிப்பாக சேர்வார் நம்பிக்கை இருக்கு

      Delete
    2. Martin Mystere - Yes !! And after all this why not the King? Why not TEX ?

      Delete
    3. Tex kidaippathu kashtam ji athanal thaan yaarum kekklannu ninaikiren 😁

      Delete
  14. Dear கலீல் சார், thanks for the yearly schedule. Wow. You are going to stunn us every month for sure.

    ReplyDelete
  15. சந்தா அறிவிப்புக்கு வாழ்த்துக்கள்....
    சந்தா அறிவிப்பில் எதிர்பாரத இன்ப அதிர்ச்சி, ராபின் ம‌ற்று‌ம் ஜூலியா...சந்தாவில் இணைந்தாகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  16. நண்பர் வினோபாவின் காமிக்ஸ் இரண்டும் Top Class ! தமிழுலகில் இவ்வாறான ஆற்றல் உள்ளது என்பதே ஒரு பெருமை ! VAGAM COMICS இவற்றை ஊக்குவித்தது சிறப்பானது. லயன் மற்றும் முத்து காமிக்ஸிலும் இவரது ஆக்கங்கள் வர வேண்டும் - இவர் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. பெருந்தன்மையான ஊக்கம் ஜி நிச்சயம் அவரது புகழ் எல்லா இடத்திலும் எதிரொலிக்கும்

      Delete
  17. I wanted to publish Cisco and several others. Not yet started :). You have beat me to it! Congratulations!! Good luck!!!

    ReplyDelete
  18. இளம் டெக்ஸ் மட்டும் முயற்சி செய்யலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈரோட்டில் டயபாலிக்!