Posts

Showing posts from August, 2022

மரண ஒப்பந்தம்

Image
அன்புடையிர் வணக்கம்   எங்களது முதல் இதழான மரண ஒப்பந்தம் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கவே இல்லை | அந்த சந்தோஷத்திலேயே   இரண்டாவது கதையான சிஸ்கோவை உங்கள் கைளில் சேர்க்கிறோம் !     பல இன்னல்கள் , சிரமங்கள் , பலவித தியாகங்களை கடந்தே கார்மோடி கரை சேர்ந்தது !  கார்மோடி கதைக்கு தொடக்கம் கண்டது ஜனவரி மாதம் என்றாலும் ,  வெளிவந்தது என்னவோ ஜூலையில்தான் !    முதலில் கதையோ , கம்பெனிகளையோ தேர்வு செய்யாமல், சில குறிப்பட்ட   கம்பெனிகளுக்கு மட்டும் பதிப்பக உரிமைக்காக ரைட்ஸ் கேட்டு , மெயில் அனுப்பியிருந்தோம் !  எங்களுடைய மெயிலுக்கு முதலில் பதில் அனுப்பியது , பெருமதிப்பிற்குரிய சார்லஸ்தான் ! அதன் பிறகு அவரிடம் உள்ள சில கதைகளை கேட்டு அதற்கான ரொக்கத்தை அனுப்பி விட்டு , அவரிடம் பதிப்பக உரிமைக்கான ரைட்ஸ், ஐயும் , ஸ்கேனையும்   வாங்கிக் கொண்டு , கார்மோடிக்கான வேலையை மார்ச் மாதம் தொடங்கினோம் !    கார்மோடியின் முதல் கதையின் மொழிபெயர்ப்பை   நண்பர் சுரேஷ்பாபு தொடங்க , அதன் இரண்டாவது கதையான ஹிட்மேன் கதையை நண