Posts

Showing posts from September, 2022

சிஸ்கோ கிட் ஸ்பெஷல்

Image
அன்புடையீர் வணக்கம் வகம் காமிக்ஸ்   வெளியிட   முடிவு   செய்ததுமே முதலில் முடிவானவர் கேனான் பால் கார் மோடி தான்! அதன்,  பிறகு  இரண்டாவதாக  முடிவானவர் வன்மேற் கின் நமது அபிமான நாயகரான சிஸ்கோகிட் தான்! கார்மோடி   புத்தகம் வெளிவந்த பிறகு,   கதை, மொழிபெயர்ப்பு, மேக்கிங் என எல்லாவற்றிலுமே   சிறப்பான பெயர்   பெற்றிருந்தாலும், விற்பனையில் சற்று மந்த நிலையாகவே   சென்றதால்,   சற்று   ஏமாற்றத்துடனே   சிஸ்கோவின் பணியை தொடங்கப்பட்டது! முதலில், ஏற்கனவே வெளிவந்த கதை ஒன்று , இதுவரை வெளியிடப்படாத இரண்டு கதைகள் என தேர்வு செய்து, அதனை   மூன்று நண்பர்களுக்கு மொழிபெயர்க்க அனுப்பப்பட்டது! மொழிபெயர்ப்புக்கு அனுப்பிவிட்டு இந்த கதைக்கான முன் அட்டைப்படத்திற்கு எதை   போடுவது   என்று   யோசித்துக்   கொண்டிருக்கும் போது, ஏதேதோ   சிஸ்கோ அட்டைகளை ஆன்லைனில் தேடிப் பார்த்தும் எதுவும் தோதாக சிக்கவில்லை!   சிஸ்கோவிற்காக காப்பி ரைட்ஸ் வாங்கியவரும் கதைத்   தொடருக்கான   டிஜிட்டல் பைல் மட்டுமே அனுப்பி இருந்தாரே, தவிர அட்டைப் படங்கள்   எதுவும் தராததால்   என்ன   பண்ணுவது