அன்புடையீர் வணக்கம்!
திடீர் ஸ்பெஷல் போல தீபாவளி கதம்ப மலரை அறிவித்து விட்டு, அதை கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஒரு கட்டத்தில் இதனால் ஹை பிரஷரே வரும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்! நிறைய கதைகள் ஒரே இதழில் கொண்டு வரும் அனுபவம் இல்லாததினால் ஏற்பட்ட சிக்கல். எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்து தீபாவளி கதம்ப மலரை கொண்டு வந்தாச்சு! இந்த புத்தகத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, நிறைய நெருங்கிய நண்பர்கள் பார்த்து பண்ணுங்கள் எல்லாமே பிரிட்டிஷ் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது! அதுவுமில்லாமல் இது ஒரு மெகா பட்ஜெட் பணத்தை போட்டு, கையை சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்று நிறைய அறிவுரைகளும், ஆலோசனைகளும் வந்து கொண்டேயிருந்தது! அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டே தீபாவளி மலரை கொண்டு வரும் முனைப்பிலே தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்! காரணம், என்னதான் பிரிட்டிஷ் கதைகளாக இருந்தாலும், வெளிவரப்போகும் கதைகளின் மீது ஆழ்ந்த, அதீத நம்பிக்கையின் காரணமாகவே இதில் முனைப்பாக இருந்தேன்!
அதேசமயம் இது நிச்சயம் பலரை கவரும் என்றும் எண்ணியிருந்தேன்! இதற்கிடையே புத்தக வேலையை முடித்து விட்டு, பைலை பிரிண்டிங்கு அனுப்பி விட்டு, புத்தகத்திற்கான முன்பதிவையும் தொடங்க செய்தேன்! முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே வந்திருந்த முன்பதிவை கண்டு மிகவும் அதிர்ச்சி ஆகி விட்டது! எதிர்பார்த்ததை விட மிக குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு ஆகியிருந்தது! அடடா நண்பர்கள் சொன்னதை கேட்டிருக்கலாமோ என்று கூட நினைக்கவும் தோன்றியது! இதற்கிடையே பிரிண்டிங்கில் காலதாமதம் ஏற்பட, இதைப்பற்றிய சிந்தனையை விட்டுவிட்டு அடுத்த மாத (நவம்பர்) புத்தகத்தின் வேலையை பார்க்க தொடங்கினேன்! இதற்கிடையில் சிறுக, சிறுக முன்பதிவும் வந்த (சேர்ந்த) வண்ணமாக இருந்தன! முடிவில் பயந்த மாதிரி இல்லாமல், மரண ஒப்பந்தத்திற்கும், சிஸ்கோவுக்கும் ஆனதை விட கூடுதலாகவே முன்பதிவு ஆகியிருந்தது! பிறகு, புத்தகம் வெளிவந்த உடனே பலருக்கு அனுப்பப்பட்டு, அதனுடைய கருத்துக்கள் வரத் தொடங்கியதுமே, இதுவரை வாங்காதவர்கள் கூட வகம் காமிக்ஸை கேட்டு வாங்கி வருகின்றனர்!
வகம் காமிக்ஸ் வாசகர்கள் மட்டுமில்லாமல் கடைகாரர்களும் ஆர்வமாக வகம் காமிக்ஸ் தீபாவளி மலர் வந்து விட்டதா என்று கேட்டு, வாங்கி வருகின்றனர் இது மிகப் பெரிய சந்தோஷத்தை அள்ளித் தருகிறது! எல்லாவற்றிற்கும் காரணம். வகம் காமிக்ஸ் மீது சிறிய ஒளி வட்டம் விழத் தொடங்கியுள்ளது! இதனை இன்னும் சிறப்பாக கொண்டு செல்லும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன்! தீபாவளி மலர் சூடு அடங்குவதற்குள் இம்மாத இறுதிக்குள் இரண்டு புத்தகம் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன்!
முதல் கதை இலங்கையில் வசிக்கும் எஸ்.வினோபாவின் புத்தகமும், மற்றொன்று மீண்டும் மூன்று பிரிட்டிஷ் நாயகர்களின் கதைகள் கொண்டது. முதலாவதாக எண்ணெய் கிடங்கில் நடக்கும் ஹைஜாக் பற்றிய கதை, இதனுடன் கிளென்ஸி அண்ட் மன்ப்ரெட்டின் சிறிய துப்பறியும் கதையும், கூடவே நமது வெகுமதி வேட்டையன் ஜானின் கதையும் சேர்ந்து மூன்று கதைகள் ஒரு இதழாக வருகிறது! டிசம்பரில் மீண்டும் சிஸ்கோ வருகிறார்! சிஸ்கோ கிட் ஸ்பெஷல் - 2 வருகிறது! இதில் வழக்கம் போல் ஒரு பழைய கதையும், இரண்டு புதிய கதையும் சேர்ந்து வரும்! அடுத்த வருடம் முதல் நமது வகம் காமிக்ஸில் இணைந்து கொள்ள இன்னும் சில புதிய, மற்றும் பரிட்சயமான ஹீரோக்கள் வர இருக்கிறார்கள்! அதைப்பற்றிய அறிவிப்பு டிசம்பரில் அறிவிப்பு வரும்! இதுவரை இணைந்து ஒத்துழைப்பு கொடுத்து வரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் - நன்றி
அடுத்த மாதம் வெளிவரவுள்ள கதைகளின் அட்டப்படம்
நண்பரே...உங்கள் கடின உழைப்புக்கு நீங்கள் நிச்சயமாக வெற்றிப்பெறுவிற்கால்... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Deleteஅட்டைகள் பிரம்மாண்டம்... அறிவிப்புகள் கனஜோர்.
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteதீபாவளி மலரை பார்த்து பிரமித்து விட்டேன்
ReplyDelete280 பக்கம் குண்டு புக்
இலவச தாய விளையாட்டு
குட்டி புக் ஒன்று
குண்டு +குட்டி புத்தகங்கள் அருமை
ஓவியங்களும் தரமாக இருந்தது
கோடை மலராக ஒரு கு ண்டை போடுங்கள்
நன்றி சார் வாய்ப்பு கிடைத்தால், போட்டுத் தாக்கி விடலாம் 😉
Deleteபொங்கல் மலரை தீபாவளி மலர்போல் கொண்டுவாருங்கள்
ReplyDeleteநேரம் மிக குறைவாக உள்ளது சார்! இருந்தாலும் முயற்சிக்கலாம்
Delete