சிஸ்கோ கிட் ஸ்பெஷல்
அன்புடையீர் வணக்கம்
வகம் காமிக்ஸ் வெளியிட
முடிவு செய்ததுமே முதலில் முடிவானவர் கேனான் பால் கார்மோடிதான்! அதன், பிறகு இரண்டாவதாக முடிவானவர் வன்மேற்கின் நமது
அபிமான நாயகரான
சிஸ்கோகிட் தான்! கார்மோடி புத்தகம் வெளிவந்த பிறகு, கதை, மொழிபெயர்ப்பு,
மேக்கிங் என எல்லாவற்றிலுமே சிறப்பான பெயர் பெற்றிருந்தாலும், விற்பனையில் சற்று மந்த நிலையாகவே சென்றதால், சற்று ஏமாற்றத்துடனே சிஸ்கோவின் பணியை தொடங்கப்பட்டது! முதலில், ஏற்கனவே
வெளிவந்த கதை ஒன்று , இதுவரை வெளியிடப்படாத இரண்டு கதைகள்
என தேர்வு செய்து, அதனை மூன்று நண்பர்களுக்கு
மொழிபெயர்க்க அனுப்பப்பட்டது! மொழிபெயர்ப்புக்கு அனுப்பிவிட்டு இந்த கதைக்கான முன் அட்டைப்படத்திற்கு
எதை போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஏதேதோ சிஸ்கோ அட்டைகளை
ஆன்லைனில் தேடிப் பார்த்தும் எதுவும் தோதாக சிக்கவில்லை!
சிஸ்கோவிற்காக காப்பி ரைட்ஸ் வாங்கியவரும் கதைத் தொடருக்கான டிஜிட்டல் பைல் மட்டுமே அனுப்பி இருந்தாரே, தவிர அட்டைப் படங்கள் எதுவும் தராததால் என்ன பண்ணுவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, இதைப்பற்றி திரு, கர்ணன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, கவலையை விடுங்கள்
ஏதாவது நல்லதா கருப்பு வெள்ளை இமேஜை அனுப்புங்கள்! நான் அதனை
கலர் பண்ணித் தருகிறேன்
என்று நம்பிக்கையாய் சொன்னதுமே, நானும் நிறைய சிஸ்கோ படங்களை தேடிக் கொண்டிருக்கும் போது, சிஸ்கோ கிட்டின் ஆங்கில பதிப்பக புத்தகத்தில்
ஒரு பெண்ணை காதல் ரசனையுடன் கொஞ்சுவது போல ஒரு படம் கண்ணில் பட, அட இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது!
அதேசமயம் இது போன்ற ஒரு படத்தை யாரும் அட்டைப்படத்திற்கு முயற்சி செய்ததில்லை என்று,
அந்த படத்தை தேர்வு செய்து, திரு. கர்ணன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்!
அவரும் ஒரு மூன்று நாள் எடுத்துக் கொண்டு,
நான்காவது நாள் வண்ணம் தீட்டிய அட்டைப் படத்தை அனுப்பி வைத்தார்! அதை பார்த்தவுடனே ரொம்ப கிளாசிக்கா இருக்கே
என்று பரவசப்பட்டு,
அதனை நண்பர்களுக்கும்
ஷேர் செய்தேன். அவர்களும்
அதை பார்த்து விட்டு, உடனே ரொம்ப பிரமாதமாக உள்ளது இதை ஹோல்டு பண்ணி வையுங்கள்.
ஐந்து கதைகள் சேர்த்து,
சிஸ்கோ காம்போ மலராக தீபாவளிக்கு
போட்டு விடலாம் என்று கருத்தும் தெரிவித்தார்கள்! ஆனால், எனக்கு அதில் உடன்பாடு
ஏற்படவில்லை! ஐந்து சிஸ்கோ கதைகள் ஒரே
இதழில் வந்தால் அது சற்று திகட்டி விடும் என்று கருதி அத்திட்டத்தினை
மறுத்து விட்டேன்! சிஸ்கோ ஸ்பெஷல் 1ல் மூன்று கதைகள் சரியான தீர்வாக
இருக்குமென்று, அதில் ஒரு கதை ஏற்கனவே வெளிவந்த கதை மற்ற இரண்டு கதைகள் புதிய கதையாக
முடிவு செய்து விட்டு, முதல் புத்தகத்திற்கு
இந்த அட்டையே
வந்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானத்தி,
அந்த அட்டையையே
ஓகே செய்த பிறகு, பின் அட்டையும் மடமடவென
தயாரானது! மூன்று கதைகளின் மொழிபெயர்ப்பும் வந்ததும், அதை மூன்று வெவ்வேறு
நண்பர்களுக்கும் மேற்பார்வைக்கு
அனுப்பி வைத்துவிட்டு, டிடிபி வேலையும் முடிந்து கடைசியாக
உள்கட்ட இணைப்பு வேலைகளை பார்த்துக்
கொண்டிருக்கும் போது, எனது உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு ஒரு 15 நாள் தாமதமானது!
90% சதவிதம்
உடல்நிலை சரியான நிலையிலேயே,
சரி இன்னும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கருதி,
மீதி இருக்கும் 10% சதவித வேலைகளும் முடித்து பிரிண்டருக்கு
அனுப்பி வைத்துவிட்டேன். அவர்கள் தயார் செய்து அனுப்பும் புத்தகத்திற்காக
காத்திருந்தபோது, அவர்களும்
கொஞ்சம் தாமதப்படுத்தி விட்டார்கள் ! சரி தாமதமும் ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்துக் கொண்டு, புத்தகம் ஒரு வழியாக வந்து சேர்ந்ததுமே
பேக்கிங் வேலைகளை மடமடவென பண்ண ஆரம்பித்து,
மறுநாள் முன்பதிவு
பண்ண சிலநண்பர்களுக்கு அனுப்பிட்டு,
ரிசட்டுக்காக காத்திருக்க தொடங்கினேன். புத்தகம் கைப்பற்றிய உடனே எல்லோரும்
புத்தக மேக்கிங்,
அட்டைப்படம், பேப்பர் குவாலிட்டி எல்லாமே அட்டகாசமாக
உள்ளதாக பலர் கருத்து தெரிவித்த வண்ணமாக இருந்தனர். இதனை பார்த்ததுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது! அது இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வலர்கள் அதிலும் இதுவரை புத்தகத்தை
பற்றிய கருத்தை இதுவரை
சொல்லாதவர்களும் இப்புத்தகத்தை பற்றி சிலாகித்து
கருத்து சொன்னதோடு, கவிதையையும் சிஸ்கோவிற்காக
எழுதுவதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும்
இருந்தது! அதே சமயம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பும் படபடப்பும் அதிகரித்துவிட்டது!
வகம் காமிக்ஸ் வெளிவந்த
இரண்டாவது இதழுக்குப் பிறகு, ஒரு ஸ்பெஷல் இதழ் போடலாம் என்று முடிவு செய்துள்ளேன்! அதை தீபாவளி மலராக வெளியிட உத்தேசித்து, அதில் ஆறு கதைகள் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதி பிரிட்டிஷ் கதைகளை தேர்வு செய்ததில்,
முதலாவதாக மனதில் வந்தவர் வெகுமதி
வேட்டையன் ஜான் (இவர் ஏற்கனவே தமிழில்
ஜான் ராம்போவாக அறிமுகம் ஆகியுள்ளார் ) அடுத்ததாக
ராஸ் ஹார்பர் , கேப்டன் டாம்,
கெர்க், ஜோனஸ் போன்ற நாயகர்களின் கதைகளைக் கொண்டு தீபாவளி மலர் தயாராகிக் கொண்டிருக்கிறது! எப்படியும் தீபாவளிக்கு முன்னதாக
கொண்டு வரவும் வேலைகள்
மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது! இதுவும் தாமதம் ஏற்படாமல் வெளிவந்து விடும் என்றே நினைக்கிறேன்!
ஒவ்வொரு புத்தகமும் வெளிவரும் போதெல்லாம் அதனுடைய மதிப்பீடு தெரிந்து கொள்ள ரொம்ப ஆவலாக உள்ளேன்.
இரண்டு புத்தகமும் நல்ல மதிப்பீடு பெற்று வந்துள்ளது இதன் நம்பிக்கையிலேயே
மூன்றாவது புத்தகமும் தயாராகிக்
கொண்டிருக்கிறது! அதுவும் வாசகர்களிடம் அமோக ஆதரவையும், வரவேற்பையும் பெருமென்ற நம்பிக்கையுடன்
விடை பெருகிறேன்
மீண்டும் தீபாவளி மலர் வெளிவந்தவுடன் அதைப் பற்றி சிலாகிப்போம் நன்றி நண்பர்களே -
கடைசியாக குதிரையில் அமர்ந்தவாறு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் சிஸ்கோ கிட் படத்தை இலங்கையை சேர்ந்த காமிக்ஸ் வாசகரும் எனது இனிய நண்பருமான வினோபா அவர்கள்! வரைந்தது. சிஸ்கோ கிட் போடுவது என்று முடிவானதுமே நண்பர் வினோபாவிடம் ஒரு சிஸ்கோ கிட் படம் வரைந்து கொடுங்கள். அதை வெளிவரும் சிஸ்கோ புத்தகத்தில் போட்டு விடலாம் என்று சொல்லியிருந்தேன்! அவரும் மடமடவென வரைந்து அனுப்பி விட்டார். மிகத் திறமையான கலைஞர்! அவரின் கதைகள் இரண்டு உள்ளன. அவற்றை வரும் மாதங்களில் தோதான சமயத்தில் போட்டு விடலாம்! வகம் காமிக்ஸ் சார்பாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்!
புத்தகம் அருமையாக வந்துள்ளது கலீல் ஜி. இந்த வரலாற்று சிறப்பு மிக்க புத்தகத்தில் எனது பங்களிப்பும் கொடுக்க முடிந்தது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
ReplyDeleteபுத்தகம் சிறப்பாக வெளிவந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான் ஜி! இதில் எல்லோருடைய பங்களிப்பும் இருந்ததாலே இது சாத்தியமானது!
ReplyDeleteபுத்தகம் நன்று. இது வரை ஏற்கனவே பழகிய தடத்தில் படைப்பில் தரம் கண்டோம்.தீபாவளி ஸ்பெஷலில் புதிய நாயகர்களை காண ஆவல். வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி சார் தீபாவளிக்கு எப்படியும் கொண்டு வந்திடலாம் புதிய நாயகர்களை
Deleteமுதல் புத்தகம் போலவே, சிஸ்கோ தயாரிப்பு தரமும் அருமை, கதை தேர்வும் நன்று. எந்த வித பின் பலமும் பண பலமும் இல்லாமல் ,comics passion என்ற வார்த்தை உங்களை இந்தளவு கொண்டு வந்து இருக்கிறது என்றால், உங்கள் காமிக்ஸ் காதல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. உங்கள் முயற்சி தொடரட்டும்.
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteகதை தேர்வில் , புதிய கதை அம்சங்கள் for example, திகில், திரில்லர், investigation, sci-fi, puthayal வேட்டை, adventure போன்ற மாதம் ஓரு சுவை கதைகளைப் எதிர் பார்க்கிறேன்
ReplyDelete+1
Deleteஇப்போது தானே பயணத்தை தொடங்கி உள்ளோம்! நீங்கள் எதிர்பார்க்கும் கதையெல்லாம் ஜனவரிக்கு மேல் எதிர்பார்க்கலாம்
Deleteதீபாவளி சிறப்பு இதழ் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி ஜி தீபாவளி மலருக்கு கூடுதல் நேரம் எடுத்து பண்ண வேண்டியதாக உள்ளது! வடிவேல் மாதிரி எதை செய்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் பிளான் பண்ணலன்ன சிக்கல் தான் என்ற மாதிரிதான் வேலை போயிட்டிருக்கு
Deleteதீபாவளி மலரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அது குறித்து எத்தனை கதைகள் என்பதை பற்றியும் விரைவில் எதிர்பார்க்கிறோம்
ReplyDeleteநன்றி ஜி விரைவில் அறிவிப்பு செய்து விடலாம்
Deleteகாலேஜ் நாட்களில் departmentக்குக்காக ஒரு குறைந்த பட்ஜெட்டில் ~30 பக்க magazine தயாரித்தோம். நாக்கு தள்ளிவிட்டது
ReplyDeleteஒரு காமிக்ஸ் ரசிகர்/முகவராக இருந்து நண்பர்கள் உதவி மட்டும் வைத்துக்கொண்டு தமிழில் காமிக்ஸ் வெளியிடுவது அபார சாதனைதான்
நன்றி ஜி பல சோதனைகளை கடந்தால் தான் சில சாதனைகளை பண்ண முடிகிறது!
DeleteKaleel ji..
ReplyDeleteகார்மோடி அசத்தல் என்றால் சிஸ்கோ அட்டகாசம்.
வேற லெவல்.😘
என் ஆதர்ச நாயகர் சிஸ்கோ கதைகளை படிக்க படிக்க பால்ய வயதிற்கே சென்றதுபோல ஒரு பீலிங்.😍
இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.🙏💐
எதிர்பார்ப்புகளை முடிந்தளவு பூர்த்தி பண்ணுவோம் ஜி
Deleteஇரண்டையும் வாங்கியுள்ளேன்.படித்துவிட்டு என் கருத்துக்களைச் சொல்கின்றேன்.
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteகதை,தரம் இரண்டும் அருமை
ReplyDeleteதீபாவளி டீசர் வெளியிடவும்
நன்றி சார்! தீபாவளி கதைகள் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும்
Deleteதீபாவளி மலர் பிரேவியூவும் போட்டு விடுங்க ஐயா...
ReplyDeleteவிரைவில் தலைவரே
Deleteசிஸ்கோ கிட் ஸ்பெஷல் படித்தேன். என் மனங்கவர்ந்த பால்ய காலத்து ஹூரோ சிஸ்கோவின் மூன்று கதைகளும் முத்தாக இனித்தன.கெளபாய் கதைகள் என்றவுடன் முதலில் ஞாபகம் வருபவர் சிஸ்கோ கிட் தான். ஏனெனில் வன்மேற்குக் கதை நாயகர்கள் கரடுமுரடானவர்கள் அழுக்கான குதிரைகளில் சவாரி செய்பவர்கள் என்பது எழுதப்படா விதி. அதை உடைத்தவர் நமது அழகான நாயகர் சிஸ்கோ கிட் தான்.அப்படிப்பட்ட அருமை நாயகர் சிஸ்கோவின் மூன்று முத்தான கதைகள் முக்கனிகளாய் படிப்பதற்குக் கிடைத்ததை என் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். வகம் காமிக்ஸின் முதல் வெளியிடாக சிஸ்கோ வந்திருந்தால் சூப்பரான அறிமுகமாக இருந்திருக்கும்.சிற்சில குறைகள் உள்ளன. அதை இரண்டு மாதக் குழந்தை என்பதால் சுட்டிக் காட்டவில்லை. சிறப்பான அட்டைப் படம் இதழுக்கு மேலும் பொலிவு சேர்க்கிறது. மொழிபெயர்ப்பு அட்டகாசம். அச்சுத் தரம் நன்றாக உள்ளது. மேன்மேலும் சிறப்பான ஆக்கங்களை வெளியிட வாழ்த்துகின்றேன். வகம் காமிக்ஸ் வெற்றி வாகை சூடட்டும்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Deleteவருடம் இரண்டு குண்டு புக் வெளியிடுங்கள்
ReplyDelete