வதனம் பிம்பம் சிஸ்கோ







அன்பு நண்பர்களே வணக்கம்!

இந்த மாதம் வெளிவந்துள்ள சிஸ்கோ கிட் ஸ்பெஷல் – 3 வது புத்தகம் வெளிவந்து பலரை கவர்ந்து வருவது மகிழ்ச்சியே. முதல் கதையான கால்நடை திருடர்கள் கதையில் வரும் அழகியான டாமி டூ கன்,னும் இரண்டாவது கதையான பழிக்குப் பழி கதையில் வரும் ட்ரிக்கரும் பலரின் மனம் கவர்ந்தவர்களாக மாறியுள்ளனர். வீரன், சூரனாக வாழ்ந்து வந்த ட்ரிக்கர் தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியத்தினால் துப்பாக்கியை தூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படியெல்லாம் சந்திக்கிறார் என்பதை அழகாக சொல்லியக்கதை இந்தக்கதையை (பழிக்குப் பழி) நானும் ரொம்ப ரசித்து படித்த கதை. மூன்று கதைகளுமே பலரை கவர்ந்திருந்தாலும் கூட ஒரு சிலருக்கு முதல் இரண்டு சிஸ்கோ புத்தகத்தின்  அட்டைப்படம் போல இதிலும் அமையாதது வருத்தமே! சிஸ்கோ புத்தகத்திற்கு அட்டைப்படம் தான் பெரும் பிரச்சனையே! சிஸ்கோ கதைகள் எல்லாமே ஸ்ட்ரீப்பாக வந்தது என்பதால் அதற்கு தனி அட்டைப்படங்கள் கிடையாது! அதே போல நல்ல குவாலிட்டியான தனி இமேஜும் இண்டெர்நெட்டிலும் கிடையாது எப்படியோ தேடிப்பிடித்து தனி இமேஜ் அதுவும் கருப்பு வெள்ளையில்  நல்ல குவாலிட்டி இமேஜாக பிடித்து, அதற்கு வர்ணம் தீட்டி மெருகேற்றி அட்டைபடமாக மூன்று புத்தகத்திற்கும் கொண்டு வந்திட்டோம்! இந்த பிரச்சனைகள் அடுத்தடுத்த புத்தகத்திற்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்! இந்த பிரச்சனையை சமாளிக்கதான் இலங்கையை சேர்ந்த நண்பர் எஸ்.வினோபா அவர்களிடம் கோரிக்கையை வைக்க அவரும் ஒரு சிஸ்கோ அட்டைப்படத்தை வரைந்து (கருப்பு &வெள்ளையில்) அனுப்பி விட்டார். சரி இதற்கும் ஒரு போட்டி வைக்கலாம் என்ற எண்ணமும் திடீர்னு தோன்றியது! அதாவது சிஸ்கோ கருப்பு வெள்ளை படத்திற்கு யாராவது வர்ணம் தீட்ட தயாரக இருந்தால், அவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்! அவருக்கு இந்த இமேஜ் மெயிலில் அனுப்பி வைக்கப்படும்! இந்தப் போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்! வர்ணம் என்னை கவருகிற மாதிரி இருந்தால் மட்டுமே சிஸ்கோ ஸ்பெஷல் – 5 ஆர் 6 இல் இந்த அட்டைப்படம் இடம்பெயரும் அத்தோடு புத்தகத்திலும் உங்கள் பெயரும் இடம் பெயரும் இது இல்லாமல் நியாபகற்த்தமாக சிஸ்கோ கிட் பேட்ஜும் வழங்கப்படும்! ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் – நன்றி இந்த மாத இறுதில் ஏஞ்சலா கதை வருகிறது! வழக்கமான அதிரடி ஆக்‌ஷன் ஹூரோயினோ ஏஞ்சலா கிடையாது! இதுவொரு மாமூலான கதை மாதிரி இல்லாமல் இதுவொரு வித்தியாசமான பாணிக்கதையாக இருக்கும் கதைப்பற்றி இப்பவே சிலாகித்து பேசிவிட்டால் பிறகு, படிக்கிற ஆர்வம் குறைந்து விடுமென்பாதால் கதையைப் பற்றி பேசவிரும்பவில்லை! படித்து விட்டு வழக்கம் போல உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள் – நன்றி

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் –

என்றும் அன்புடன்

அ.கலீல்    









கீழே உள்ள சிஸ்கோ படம் தான் வர்ணம் தீட்ட வேண்டிய படம்!
                                      

 

Comments

Popular posts from this blog

ஈரோட்டில் டயபாலிக்!