ஈரோட்டில் டயபாலிக்!
சென்ற வருடம் ஜூலையில் துவங்கிய நமது காமிக்ஸ் பயணம், ஒரு வருடம் கடந்து சென்று கொண்டிருப்பது மிகப் பெரிய விஷயம் என்றுதான் சொல்லுவேன்! புத்தக வாசிப்பாளர்கள் குறைந்திருக்கும் நிலையில், அதுவும் சித்திரக்கதை வாசிப்பாளர்கள் என்பது மிகச்சிறிய வட்டம் கொண்டது! அப்படி இருந்தும் எப்படியோ தட்டுத்தடுமாறி புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே! அதுவும் ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில் ஈரோடு புத்தக கண்காட்சியில் நமக்கொரு தனிஸ்டால் கிடைத்தது, மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் கருதுகிறேன். புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பதால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டாலும், என்ன ஆனாலும் பரவாயில்லை, எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள இதுவொரு வாய்ப்பாகவே கருதினேன்.
அங்கு இருந்த பனிரெண்டு நாட்களும் ஏதோ ஒரு புதிய உலகத்தில்
வசித்தது போல் இருந்தது! (அதையெல்லாம் சொல்லணும்னா ஒரு புத்தகமே எழுதலாம் போல) நம்
புத்தகங்கள் வாங்குவதற்கும், நம்மை சந்திப்பதற்கும் கேரளா, கோயமுத்தூர், பெங்களூர்,
மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர், ஓசூர், இன்னும் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர்.
புத்தக விற்பனை பெரியதாக இல்லாவிட்டாலும் கூட, பல நல்ல உள்ளங்களை சந்திக்கும் வாய்ப்பை
ஈரோடு புத்தக கண்காட்சி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது! அதே போல், புத்தக கண்காட்சி தொடங்கிய
முதல் வாரத்திலேயே நிக் ரைடரின் அபாய நகரம் & புகை பிடிக்காதீர் புத்தகத்தை விற்பனைக்கு
கொண்டு வந்தாயிற்று, அதற்கு அடுத்த வாரத்தில் டயபாலிக் வெளியிடலாம் என்று முடிவு செய்து
அறிவிப்பும் கொடுத்த பிறகு, நானே எதிர்பார்க்காத வண்ணம் டயபாலிக் சத்தமில்லாமல் பயங்கர
வரவேற்பு பெறத் தொடங்கி விட்டார், சரி, இவரை ஈரோட்டிலே எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் வெளியிட முடிவு செய்து,
திரு, ராமச்சந்திரன் & திரு, சங்கர் இருவர் கைகளிளும் புத்தகத்தை கொடுத்து வெளியிட திட்டமிட்டு அவர்களிடமும் சொல்லி விட்டேன், பிறகு, இதை யாராவது ஒரு வாசகர் கையில் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று
கருதி, ஈரோட்டுக்கு அருகில் யார் உள்ளார்கள் என யோசித்த போது. சென்னிமலை சரவணன் நியாபகத்திற்கு
வந்தார். உடனே அவரை தொடர்பு கொண்டு, இன்று மாலை டயபாலிக் புத்தகத்தை வெளியிட உள்ளேன்,
வர முடியுமான்னு கேட்டதுமே, மறுக்காமல் சந்தோஷமாக வரேன் அண்ணா என்று பதிலலித்தார், ஆஹா ஒரு வாசகர்
கிடைத்து விட்டார் எனக் கருதி, திரு, சங்கர் & ராமச்சந்திரன் சாரிடம் சொல்லி மற்ற
ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க, சரியாக மாலை 6.30 க்கு எல்லோரும் நமது ஸ்டால் முன்பு
ஆஜாரானார்கள், இதில் சென்னிமலை சரவணன் அவர்கள் டயபாலிக்
பெயர் போட்ட கேக்கோடு ஆஜாரானார், அவருடைய நண்பர் திருப்பூர் குமார் பப்ஸோடு ஆஜாராக,
மேலும் களைகட்டத் தொடங்கியது! உடனே கேக் வெட்டி, புத்தகத்தை வெளியீட, நண்பர்கள் அனைவரும்
அதைப் பெற்றுக் கொள்ள, அதில் திடீர் அழையா விருந்தாளியாக மாதவன் சாரும் கலந்து கொள்ள,
போட்டோக்கள் போஸ் சகிதமாக டயபாலிக் புத்தகம் வெளியிடு சிறப்பாக முடிந்தது! ஈரோடு புத்தக
திருவிழா மட்டுமில்லாமல் எல்லாமே சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைந்தது!
இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகவே எல்லோருக்கும் அமைந்தது!
இதுவரை நேரில் கண்டிராத நிறைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது ஈரோடு
புத்தக திருவிழா, அங்கு வந்திருந்த நண்பர்கள் மட்டுமல்லாமல், அருகிலிருந்த கடைக்காரர்களும்
அன்பாகவே பழகியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது! ஏதோ நீண்ட காலம் பழகிய நண்பர்கள் போலவே
அனைவரும் பழகினர்! இந்த நிகழ்விற்காகவே அடுத்த வருட ஈரோடு புத்தக கண்காட்சி சீக்கிரம்
வரவேண்டும் என்று இருக்கிறது! அதே போல நிக் ரைடரும், டயபாலிக்கும் விற்பனையில் கொஞ்சம்
முன்னேற்றம் கண்டு வருவது இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தை கூட்டி வருகிறது! ஏய் பார்த்துக்க பார்த்துக்க
நானும் ரவுடிதான் என்று சொல்வது போல் புத்தகத்தை வெளியிட்டுக் கொண்டிராமல், நமக்கென்று ஒரு தனி பாணியில்
தனி தடத்தில் சென்று கொண்டிருப்பது பலரிடம் நம்பிக்கையையும் நம்பி வாங்கலாம், நம்பி
படிக்கலாம் என்கிற உத்தரவாதத்தையும் தந்து வருவது சந்தோஷமான விஷயமே! இன்னும் கடக்க
வேண்டிய தூரம் நிறைய உள்ளது, நண்பர்களின் ஒத்துழைப்பும், உற்சாகமும் இருந்தால் இதையும்
கடந்து செல்லலாம் என்கிற நம்பிக்கை உணர்வு ஏற்படுகிறது! நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் – நன்றி
என்றும் அன்புடன்
அ.கலீல்
🙏🙏
ReplyDeleteநன்றி சகோ
Deleteதங்களை பார்த்து பேசியது மறக்க முடியாத நினைவுகள் சார்
ReplyDeleteஎனக்கும் தான் சகோ போனிலும் குறுந்தகவல்களிலும் பேசியது, நேரில் சந்தித்தது மகிழ்ச்சி
DeleteHearty congrats bro. Wish u all the best and grand success.
ReplyDeleteThank you so much brother
Deleteவாழ்த்துக்கள் Bro
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅடடே..
ReplyDeleteவெகுஜன நண்பர்கள் கலந்து கொண்டுள்ளார்களே..
சிறப்பு!
மகிழ்ச்சி!
மகிழ்ச்சி நண்பரே
Deleteவாழ்த்துக்கள் கலில் ஜி
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteசெம்ம ஜீ. டேஞ்சர் டயபாலிக் கதைகளை முடிந்தால் வரிசையாக வெளியீடுங்கள். ஒரு பெரிய கதையை சீக்கிரம் போட்டு தாக்குங்க.
ReplyDeleteடயபாலிக் கதைக்கு இப்போதான் அஸ்திவாரம் போட்டுள்ளோம் நண்பரே! தோதான கதை சிக்கினால் போட்டு தாக்கி விடலாம்
Deleteஅன்பு நண்பருக்கு வணக்கம் தங்களை பார்க்க மட்டுமே அன்று நான் புத்தக விழாவிற்கு வந்தேன். தங்களின் இந்த காமிக்ஸ் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி நண்பரே தங்களை சந்தித்ததில்
Delete@Kaleel ji..😍😘🙏
ReplyDeleteஅருமையான கதைகள்😍.. அட்டகாசமான தரம்😘..
சிகரம் தொட இதைவிட வேறு என்ன வேண்டும் ஜி..💐
வாழ்த்துக்கள் 💐💐👍👌✌
மிக்க நன்றி நண்பரே
Deleteமேலும் மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல வாழ்த்துகள் கலீல்ஜி! எப்போதும் போல் ஊக்கமுடன் முன்வையுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சார் நிச்சயமாக
Deletevagam காமிக்ஸ் நிறுவனத்தில் நான் சற்றும் எதிர்பாராத ஒரு ஹீரோ,diobolik , (diobolik உருவான கதை) நமது ஹீரோ உருவான கதை என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே என்னிடம் இருந்தது. ஒரு நெடும் தொடர் உள்ள ஹீரோ கிடைத்துவிட்டார் .படிப்பதற்கு ஏதுவா compact சைஸ், தயாரிப்பு தரம் எப்போதும் போல அருமை, மொழிபெயர்ப்பு படிப்பதற்கு ஏதுவாக நடையில். கதாசிரியர் இன்னும் விரிவாக diobolik உருவான கதையை சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது
ReplyDeleteஅட்டைப்படம் அருமை.
பல தடைகளை தாண்டி முதலாம் ஆண்டு முடிந்து ஈரோடு புத்தக விழாவிலும் வந்து விட்டீர்கள் இதுவே ஒரு பெரிய சாதனை .மேலும் நீங்கள் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார் டயபாலிக் நகையுடன் தப்பிச் சென்ற பிறகு நடக்கும் கதையும் ஒன்று உள்ளது! அதையும் விரைவில் வெளியிட உள்ளோம்!
Deleteஅந்த கதையும் சீக்கிரமாக வெளியிடுங்கள் நண்பரே
Deleteநிச்சயமாக நண்பரே அடுத்த ஸ்லாட்டில் வாங்கிடலாம்
Deleteஇரட்டை வேட்டையர், ஜெஸ் லாங் , ரோஜர் Bruno Brazil போன்றவர்களை நமது வனம் நிறுவனத்தில் கொண்டு வருவது சாத்தியமா
ReplyDeleteசாத்தியமில்லாதது எதுவும் கிடையாது சார்! நம் முயற்சிகள் இலக்குகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எதுவும் நடக்கலாம்
Deleteஇந்த வருடம் முடிய 4 மாதமே உள்ள நிலையில் அடுத்த வருடம் பட்டியல், இடம் பிடிக்கப் போகும் கதைகள் பற்றிய தகவல்களை தெரிவியுங்கள்.
ReplyDeleteஆவண முயற்சிப்போம் சார்
Deleteபுகை பிடிக்காதீர்கள்
ReplyDelete(Don't smoke)🚭
என்னடா இது!
சினிமா தியேட்டர்ல படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போடற நியூஸ் ரீல் மாதிரி தலைப்பு இருக்கேன்னு யோசனையோடதான் படிக்க ஆரம்பிச்சேன்.
ஆனால் படிச்சு முடிச்சவுடன்தான் புக்கை கீழே வைக்க முடிஞ்சது.🥰
அவ்வளவு வேகம்.. பரபரப்பு..👌
இங்கே கதைதான் ஹீரோ..💞
முதல் பேனல்ல ஆரம்பிச்ச புகை கடைசி பேனல் வரை கிட்டதட்ட எல்லா பேனல்லயும் புகையுது.
கடைசி பேனல்லயும் புகையோடதான் கதை முடியுது.👍
என்னா டுவிஸ்டு...
என்னா டுவீஸ்டு..👌
புகையில ஆரம்பிச்ச பகையை புகையால பகை முடிக்கும் underworld தாதாக்களின் கதை இது.👍
சுருக்கமா சொன்னால் தலைப்புக்கு நியாயம் செய்யும் கதை இது.
நன்றி கலீல் ஜி..💞💐
தரமான கதையை கொடுத்ததற்கு நன்றிகள்🙏💐
இதுபோல் தரமான சம்பவங்கள் நிறைந்த கதைகளை அடிக்கடி தர வேண்டுகிறேன்..🙏💐
ஸ்ரீபாபு,
நாமக்கல் 😎
உண்மையை சொல்வதென்றால் இந்த கதை எந்தளவுக்கு பிடிக்குமென்ற தயக்கம் இருந்தது! ஆனால், இப்போது இல்லை நன்றி நண்பரே
DeleteDewali, என்ன special இதழ் ji
ReplyDeleteMiles to go before we sleep, நம் comics நண்பர்களை பொறுத்த அளவில் பொழுது துவங்குவதும் comics சிந்தனையுடன் மற்றும் மாலை பொழுது முடிவதும் comics உடன்தான்.... Diabolik ஆரம்பமே அதிரி புதிரியாக உள்ளது.... Carry on kaleel./ G. சுரேஷ் குமார், சிதம்பரம். 😍🥰👍👌🤝🤝🙏💐💐💐💐💐👋
ReplyDelete