ஈரோட்டில் டயபாலிக்!
சென்ற வருடம் ஜூலையில் துவங்கிய நமது காமிக்ஸ் பயணம், ஒரு வருடம் கடந்து சென்று கொண்டிருப்பது மிகப் பெரிய விஷயம் என்றுதான் சொல்லுவேன்! புத்தக வாசிப்பாளர்கள் குறைந்திருக்கும் நிலையில், அதுவும் சித்திரக்கதை வாசிப்பாளர்கள் என்பது மிகச்சிறிய வட்டம் கொண்டது! அப்படி இருந்தும் எப்படியோ தட்டுத்தடுமாறி புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே! அதுவும் ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில் ஈரோடு புத்தக கண்காட்சியில் நமக்கொரு தனிஸ்டால் கிடைத்தது, மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் கருதுகிறேன். புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பதால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டாலும், என்ன ஆனாலும் பரவாயில்லை, எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள இதுவொரு வாய்ப்பாகவே கருதினேன். அங்கு இருந்த பனிரெண்டு நாட்களும் ஏதோ ஒரு புதிய உலகத்தில் வசித்தது போல் இருந்தது! (அதையெல்லாம் சொல்லணும்னா ஒரு புத்தகமே எழுதலாம் போல) நம் புத்தகங்கள் வாங்குவதற்கும், நம்மை சந்திப்பதற்கும் கேரளா, கோயமுத்தூர், பெங்களூர், மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர், ஓசூர், இன்னும் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். புத்தக ...
All the best for grand success...
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteவகம் வெளியீட்டின் முதல் குழந்தை, மரண ஒப்பந்தம் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கிறது.. தயாரிப்பு தரம் நன்றாக உள்ளது...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி நண்பரே புத்தகம் கிடைத்ததும் எப்படி ரிசல்ட் வரப்போகுது என்கிற சற்று பயத்துடன் தான் காத்திருந்தோம்! வந்த ரிசல்டுகள் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்துள்ளது!
Deleteஅருமை. நல்வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteநாளை எனக்கு கிடைத்துவிடும் அண்ணா மிக மிக ஆவலுடன் உள்ளேன்
ReplyDeleteதாமதமாகத்தான் இதை பார்க்கிறேன் சகோ
Deleteவகம் வெளியீட்டின் முதல் பதிப்பை படித்து முடித்தாயிற்று. கன்னி முயற்சியில் வெற்றி கனியை பறித்து விட்டார் ஆசிரியர் திரு. கலீல் அவர்கள். வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் மேலும் பல புத்தகங்கள் வெளியிட்டு, தாங்கள் இத்துறையில் தழைத்தோங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஇரண்டு கதைகளும் படிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருந்தது. ஹிட்மேன் கதையில் கார்மோடி, தனது எதிரியை கையாண்ட விதம் ஒரு நேர்மறை எண்ணத்தை தூண்டும் விதமாக அமைந்தது. கார்மோடியின் கதாபாத்திர தன்மையும், நேர்மறையான கொள்கைகளும் அவர் மேல் ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணுகிறது. ஹிட்மேன் கதை இறுதியில் அவர் துப்பாக்கி கையாளும் விதமும், அதற்கான விளக்கமும் நச்..
கதையில் வரும் சில சுவாரசியமான சம்பவங்கள் பகுதி நன்று. புத்தகத்தின் தாள்கள் நல்ல தரத்தில் உள்ளன. ஆவலாய் அடுத்த வெளியீடுகளை எதிர்நோக்கி..
அடுத்த இதழை விரைவில் கொண்டு வரும் முனைப்பில் தான் வேலை போய் கொண்டிருக்கிறது! தங்களது விமர்சன நடை அருமை!
DeleteThe debut issue of Vagam Comics is really nice. Paper quality too is really nice. The mode and care of packaging needs an applause here.Colouring may require additional attention. Eagerly awaiting for the release of the next issue sir. 94426 70345
ReplyDeleteவண்ணம் தான் சற்று குறைபாடாக அமைந்து விட்டது! இதே கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்! இதை சரி செய்ய முயற்சி செய்கிறேன் நண்பரே!
Delete