நலமாய் விடியட்டும் 2023!
வணக்கம் நண்பர்களே! வகம் காமிக்ஸை இப்போதுதான் தொடங்கியது போல் உள்ளது. அதற்குள் ஆறுமாதம் ஓடிவிட்டது. இந்த ஆறு மாதத்திற்குள் ஆறு புத்தகங்கள் வெளியிட்டது மிகப்பெரிய சாதனையாக தெரிகிறது. அதிலும் ஒரு வண்ணப் புத்தகம், பாக்கெட் சைஸ், தீபாவளி மலர் என பல கதைகளை முயற்சித்தோடு இல்லாமல், குறுகிய காலகட்டத்திலேயே ஒரு வருட அட்டவணை, சந்தா எனவும் அறிமுகப்படுத்தி விட்டாச்சு! ஆனால், இரண்டு வருடத்திற்கு முன்பு, அதாவது புத்தகம் வெளியிட முடிவெடுத்த பிறகு, அயல்நாட்டு கதைகளெல்லாம் ராயல்டி கொடுத்து நம்மால தாக்குப் பிடிக்க முடியாது என்கிற காரணத்தினால், உள்ளூர் நிறுவனக் கதைகளின் லைசன்ஸ் வாங்கியே வெளியிடலாம்னு, முடிவெடுத்து பல உள்ளூர் கதைகளுக்காக அந்தந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசியதில், எதுவும் செட் ஆகாமல் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு கட்டத்தில் ஏதாவது புத்தகத்தை போட்டே தீர வேண்டும் என்கிற சலிப்பினால், பப்ளிக் டொமைன் ( இந்த புத்தகங்களுக்கு யாரிடமும் லைசன்ஸ் பெற வேண்டியதில்லை! இது பொது உடமையாக்கப்பட்ட புத்தகங்கள்) என்னும் வெப்சைட்டிற்கு சென்றால், ஏராளமான ஆங்கில கதைகள் இருந்தன. அதில், நமக்கு தேவையான கதை