
அன்பு நண்பர்களே வணக்கம்! சிறிய இடைவெளியில் வந்து இதன் மூலமாக உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சியை தருகிறது! சிலபல காரணங்களால் செப்டம்பர் மாத இதழை கொண்டு வர முடியவில்லை! அதை ஈடுகட்டும் விதமாக இம்மாதம் இரண்டு இதழைக் கொண்டு வந்தாயிற்று! இரண்டு இதழை ஒரே நேரத்தில் கொண்டு வருவதும் பல விஷயங்களுக்கு சாதகமாகவும் உள்ளது. ஒரே கூரியரில் அனுப்புவதால், பேக்கிங் வேலையும் எளிதாக உள்ளது! செலவீனங்களும் கம்மியாகிறது! அதே போல, புத்தகம் வாங்குபவர்களுக்கும் ஒரே கூரியர் கட்டணத்திலும் முடிந்து விடுகிறது! இதனால்தான் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இம்மாதம் வெளிவந்துள்ள மிருக மனிதர்கள் & மோசடி நகரம் இரண்டுமே புதிய கதைகள், புதிய களங்கள். சைஸ் மற்றும் விலை எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் வந்துள்ளது. சிஸ்கோ இந்த மாறுபட்ட சைஸ் அனைவருக்கும் பிடிக்குமென்றே நினைக்கிறேன்! இதைப்பற்றிய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதே போல் மிருக மனிதர்கள் கதைக்கும் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது! புத்தகம் எப்போ வருமென்று நிறைய நண்பர்கள் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தினந்தோற...