ஈரோட்டில் டயபாலிக்!
சென்ற வருடம் ஜூலையில் துவங்கிய நமது காமிக்ஸ் பயணம், ஒரு வருடம் கடந்து சென்று கொண்டிருப்பது மிகப் பெரிய விஷயம் என்றுதான் சொல்லுவேன்! புத்தக வாசிப்பாளர்கள் குறைந்திருக்கும் நிலையில், அதுவும் சித்திரக்கதை வாசிப்பாளர்கள் என்பது மிகச்சிறிய வட்டம் கொண்டது! அப்படி இருந்தும் எப்படியோ தட்டுத்தடுமாறி புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே! அதுவும் ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில் ஈரோடு புத்தக கண்காட்சியில் நமக்கொரு தனிஸ்டால் கிடைத்தது, மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் கருதுகிறேன். புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பதால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டாலும், என்ன ஆனாலும் பரவாயில்லை, எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள இதுவொரு வாய்ப்பாகவே கருதினேன். அங்கு இருந்த பனிரெண்டு நாட்களும் ஏதோ ஒரு புதிய உலகத்தில் வசித்தது போல் இருந்தது! (அதையெல்லாம் சொல்லணும்னா ஒரு புத்தகமே எழுதலாம் போல) நம் புத்தகங்கள் வாங்குவதற்கும், நம்மை சந்திப்பதற்கும் கேரளா, கோயமுத்தூர், பெங்களூர், மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர், ஓசூர், இன்னும் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். புத்தக