நாயகன் சிஸ்கோ!
அன்பு நண்பர்களே வணக்கம்! சிஸ்கோ என்றாலே தாமதமாகத்தான் வரும் என்று ஒரு எழுதப்படாத விதி போல மாறி விட்டது! சிஸ்கோ முதல் புத்தகம் 25 நாட்களுக்கு மேல் தாமதமாகத்தான் புத்தகம் கைக்கு வந்து சேர்ந்தது! அதைப் போல இரண்டாவது சிஸ்கோ புத்தகமும் தாமதமாயிட கூடாது என்பதற்காக, டிசம்பர் மாதமே வேலையை முடித்து பிரிண்டிங்கு அனுப்பி விட்டு, மோட்டு ஓலையை பார்ப்பது போல் தினமும் பார்த்து கொண்டிருந்தால், அதுவும் அதோ, இதோ என்று நாட்கள் ஓடியதே தவிர புத்தகம் வந்து சேர்ந்தபாடில்லை! ஒருவழியாக 13 ந்தேதி மாலைதான் பிரிண்டிங் ஆபீஸிலிருந்து போன் வந்தது! உங்கள் புத்தகம் ரெடி! பணம் அனுப்பியதும் புத்தகத்தை போட்டு விடுவோம் என்று சொல்ல, நானும் அவரிடம் இன்றே போட்டு விடுங்கள். 15 ந்தேதி பொங்கல் அன்று சென்னையில் நண்பர்கள் மத்தியில் புத்தகத்தை வெளியீடுவதாக திட்டமிட்டுள்ளேன் அதனால், இன்று எப்படியாவது அனுப்பி விடுங்கள் என்று அழுத்தமாக சொன்னதும், சொன்னது போலவே அவர்களும் அனுப்பி வைத்து விட்டார்கள்! அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், பார்சல் போட்டு அனுப்பிய ரசீதுடன், பொங்கல் விடுமுறை என்பதால் புதன்கிழமைதான் டெலிவரி தருவ