
அன்புடையீர் வணக்கம்! திடீர் ஸ்பெஷல் போல தீபாவளி கதம்ப மலரை அறிவித்து விட்டு, அதை கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஒரு கட்டத்தில் இதனால் ஹை பிரஷரே வரும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்! நிறைய கதைகள் ஒரே இதழில் கொண்டு வரும் அனுபவம் இல்லாததினால் ஏற்பட்ட சிக்கல். எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்து தீபாவளி கதம்ப மலரை கொண்டு வந்தாச்சு! இந்த புத்தகத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, நிறைய நெருங்கிய நண்பர்கள் பார்த்து பண்ணுங்கள் எல்லாமே பிரிட்டிஷ் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது! அதுவுமில்லாமல் இது ஒரு மெகா பட்ஜெட் பணத்தை போட்டு, கையை சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்று நிறைய அறிவுரைகளும், ஆலோசனைகளும் வந்து கொண்டேயிருந்தது! அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டே தீபாவளி மலரை கொண்டு வரும் முனைப்பிலே தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்! காரணம், என்னதான் பிரிட்டிஷ் கதைகளாக இருந்தாலும், வெளிவரப்போகும் கதைகளின் மீது ஆழ்ந்த, அதீத நம்பிக்கையின் காரணமாகவே இதில் முனைப்பாக இருந்தேன்! அதேசமயம் இது நிச்சயம் பலரை கவரும் எ...